ட்ரூக் பி.டி.ஜி. ஸ்டார்ம் இயர்போன்


ட்ரூக் பி.டி.ஜி. ஸ்டார்ம் இயர்போன்
x

ட்ரூக் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை பி.டி.ஜி. ஸ்டார்ம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

வீடியோகேம் பிரியர்களை மனதில் கொண்டு அவர்களைக் கவரும் விதமான வடிவமைப்புடன் கூடிய சார்ஜிங் கேசுடன் வந்துள்ளது.

ஆர்.ஜி.பி. விளக்கு எரியும் வகையிலான தன்மை கொண்டவையாக இவை வந்துள்ளன. இரண்டு மைக்ரோபோன், சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. சார்ஜிங் கேசில் உள்ள பேட்டரி 50 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து வைத்திருக்கும். குரல் வழிக் கட்டுப்பாடு மற்றும் உணர் திறன் மூலம் செயல்படக் கூடியது. கருப்பு வண்ணத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.899.

1 More update

Next Story