இன்றைய ராசிபலன் - 17.07.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆடி மாதம் 1-ம் தேதி புதன் கிழமை
நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.00 வரை விசாகம் பின்பு அனுஷம்.
திதி : இன்று மாலை 7.16 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம் காலை : 9.15 - 10.15
நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45
ராகு காலம் மாலை : 12.00 - 1.30
எமகண்டம் காலை : 7.30 - 9.00
குளிகை காலை : 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் : ரேவதி
இன்றைய ராசிபலன்:
மேஷம்
மாணவர்கள் டியூஷனுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முயற்சி செய்யுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். தாங்கள் விரும்பிய கல்லூரி கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பணவரவுக்கு பஞ்சமில்லை. பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பார்ப்பது நல்லது. தம்பதிகளிடையே மகிழச்சி நிலவும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். மனம் ஆன்மீகத்தில் அலை பாயும்.
அதிர்ஷட நிறம் : கருஞ்சிவப்பு
கடகம்
மாமனார் தங்களுக்கென உள்ள சொத்தினை பங்கினை கொடுத்துவிடுவார். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். நெருங்கிய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப் போன நட்பை தொடர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கன்னி
தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலத்திற்காக ஒரு தொகையை தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
வீட்டில் தயாரிக்கும் பட்டு சேலை மற்றும் கைவினைப் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்து விடுவர். பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த பிணக்குகள் விலகும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம் : கிரே
கும்பம்
எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். தங்கள் துணை தங்களிடம் அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும்.
அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்
மீனம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்