தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் - சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ்


தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் - சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ்
x
தினத்தந்தி 1 Feb 2023 9:48 AM GMT (Updated: 1 Feb 2023 10:26 AM GMT)

மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேயும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட். விவசாயிகள், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பற்றி மத்திய அரசு பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை.

நடுத்தர வர்க்கத்தினருக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் அதே வேளையில், தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்றார்.


Next Story