தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x

நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்;

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுக்கான மாரத்தான் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. சைக்கிள் பேரணியை பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த மேரி, வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகாதேவி, காந்தி கார்த்தி, திருப்பதி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணி நீடாமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.பேரணி ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் அசோகன் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். முடிவில் களப்பணியாளர் நூர்முகமது நன்றி கூறினார்.

1 More update

Next Story