பிரியாணி, கேக் வகைகளுடன் திண்டுக்கல்லில் 10-ந்தேதி உணவு திருவிழா


பிரியாணி, கேக் வகைகளுடன் திண்டுக்கல்லில் 10-ந்தேதி உணவு திருவிழா
x

திண்டுக்கல்லில் பிரியாணி, கேக் வகைகளுடன் உணவு திருவிழா 10-ந்தேதி நடக்கிறது.

திண்டுக்கல்

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'அனைவருக்கும் சத்தான உணவு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் இதையொட்டி திண்டுக்கல் பி.வி.கே. திருமண மண்டபத்தில் 10-ந்தேதி (புதன்கிழமை) காலை உணவு திருவிழா நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பாரம்பரிய உணவுகள் உள்பட பலவகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றன. இதற்காக மொத்தம் 45 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் இலவசமாக உணவு தரத்தை சோதனை செய்தல், உணவு பாக்கெட் உறைகளை விதிகளின்படி திருத்தம் செய்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு மாலையில் சிந்தனை பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. முன்னதாக காலையில் காந்தி கிராமத்தில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் நடைபயணம் நடத்தப்படுகிறது.



Next Story