அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்க திட்டம்


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்க திட்டம்
x

கும்பாபிஷேக விழாவிற்கு சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ராமர் கோவிலின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ள இடத்தின் புனித மண், சரயு நதியின் தீர்த்தம், ஒரு பித்தளை தட்டு, ராமர் கோவிலுக்கான போராட்டத்தின் வரலாற்றை சித்தரிக்கும் ஒரு வெள்ளி நாணயம் மற்றும் சுத்தமான பசு நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை அனைத்தும் சணலால் செய்யப்பட்ட பையில் வைத்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



Next Story