அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு - உ.பி. துணை முதல்-மந்திரி தகவல்


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு - உ.பி. துணை முதல்-மந்திரி தகவல்
x

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் அயோத்தி முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக உத்தர பிரதேச மாநில துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடார நகரத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடவுள் ராமர் வரப்போகிறார். இது மிகவும் அற்புதமான, மறக்கமுடியாத தருணம். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன" என்று தெரிவித்தார்.


Next Story