கும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்


கும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 15 Jan 2024 5:24 AM GMT (Updated: 15 Jan 2024 5:46 AM GMT)

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

சூரத்,

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநில அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், ராமர் பெயருடன் கூடிய தொப்பிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. சுமார் 2 லட்சம் வரையிலான தொப்பிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ஜவுளி தொழிலதிபர் சஞ்சய்பாய் கூறுகையில்;

"ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் 11.5 அங்குல நீளமும் 3.5 அங்குல அகலமும் கொண்டதாகும். தொப்பிகள் இறைவனின் உருவம் மற்றும் ராம நாமத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சூரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொப்பிகளின் பயன்பாடு அதிக அளவில் இருக்கும் என்பதால் அதிக அளவில் தொப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொப்பிகள் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story