சிம்புவுக்கு சொகுசு கார், கவுதம் மேனனுக்கு பைக் - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு


தினத்தந்தி 25 Sept 2022 8:17 AM IST (Updated: 25 Sept 2022 10:50 AM IST)
t-max-icont-min-icon

சிம்புவுக்கு சொகுசு கார் மற்றும் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.

சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதைக்கு, கவுதம் மேனன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story