2 நடிகைகளுக்கு திருமணம்


2 நடிகைகளுக்கு திருமணம்
x

மலையாள நடிகையான அபர்ணா வினோத் மற்றும் இந்தி, தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி ஆகிய இரு நடிகைகளுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் பைரவா படத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். இதில் கீர்த்தி சுரேசுக்கு தோழியாக நடித்து இருந்தார். பரத்தின் நடுவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மலையாள நடிகையான அபர்ணா வினோத்துக்கும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் அபர்ணா வினோத் தெரிவித்து உள்ளார்.

"உன்னை சந்தித்த நாள்தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம்" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். மேலும் தமிழிலும், ''உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா" என்று பதிவிட்டுள்ளார். அபர்ணா வினோத்துக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுபோல் இந்தி, தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கியாரா அத்வானிக்கும் திருமணம் நடக்க உள்ளது. கியாரா அத்வானியும், இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் அடுத்த மாதம் (டிசம்பர்) திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story