‘சாமி-2’ படத்தில் விக்ரமுடன் மோதுகிறார் பாபிசிம்ஹா!


‘சாமி-2’ படத்தில் விக்ரமுடன் மோதுகிறார் பாபிசிம்ஹா!
x
தினத்தந்தி 23 Jun 2017 12:14 PM IST (Updated: 23 Jun 2017 12:14 PM IST)
t-max-icont-min-icon

‘சாமி-2’ படத்தில் வில்லனாக நடிக்க பாபிசிம்ஹா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஹரி கூறியதாவது:-

“விக்ரம் அதிரடி கதாநாயகனாக மட்டுமல்லாமல் நடிப்பு திறன் மிகுந்த நடிகராகவும் இருப்பது, அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல நடிகராக இருக்க வேண்டும்.

அதனால்தான் பாபிசிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து இருக்கிறோம்.

‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில், பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருக்கும். தற்போது தயாராக இருக்கும் ‘சாமி-2’ படத்தில் பெருமாள் பிச்சையை விட, பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கதாபாத்திரத்தில் பாபிசிம்ஹா புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.”
விக்ரமும், பாபிசிம்ஹாவும் தேசிய விருது பெற்ற நடிகர்கள். பாபிசிம்ஹா வில்லனாக நடித்து கதாநாயகனாக உயர்ந்தவர். அவர், ‘சாமி-2’ படத்தில் மீண்டும் வில்லனாகி இருக்கிறார்.

1 More update

Next Story