சினிமா செய்திகள்

எதிர்ப்புகளால் சிக்கல் ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா? + "||" + Will Arya choose a problem with the protests?

எதிர்ப்புகளால் சிக்கல் ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா?

எதிர்ப்புகளால் சிக்கல் ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா?
எதிர்ப்புகள் காரணமாக ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சக நடிகர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்தும் இவருக்கு மட்டும் இன்னும் மணப்பெண் அமையவில்லை. பெற்றோர்கள், நண்பர்கள் மூலம் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் டெலிவிஷனுக்கு வந்து பெண் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், பதவி, குடும்ப விவரங்களை பதிவு செய்யும்படி ஆடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 16 பேரை தேர்வு செய்து டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர்களிடம் பழகி தன்னை கவரும் பெண்ணை இறுதியாக மணப்பெண்ணாக தேர்வு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். ஆர்யாவின் முயற்சியை சிலர் பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். மணப்பெண் தேர்வில் கலந்து கொண்டுள்ள சில பெண்கள் தங்களை பற்றிய ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.

ஒரு பெண் தனக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கூறினார். இன்னொரு பெண் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது ஆர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆர்யாவின் பெண் தேடும் அணுகுமுறை கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்று பெண் அமைப்புகளும் எதிர்க்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர். இதனால் ஆர்யாவின் பெண் தேடலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணப்பெண்ணை அவர் தேர்வு செய்வாரா? மாட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுகிறார்