ரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் கமல் கட்சியில் இணைந்துள்ளேன்- நடிகை ஸ்ரீபிரியா
ரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என நடிகை ஸ்ரீபிரியா கூறியுள்ளார். #sripiriya #Rajinikanth #kamalhaasan
சென்னை
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த கட்சியில் பிக்பாஸ் புகழ் சினேகன், நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா போன்ற பிரபலங்களும் இணைந்து கட்சிபணி ஆற்றி வருகிறார்கள்.ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.
இந்நிலையில் ரஜினி, கமல் என இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story