சினிமா செய்திகள்

வலுக்கும் எதிர்ப்புகள் - ஹன்சிகாவின் சர்ச்சை படங்கள் + "||" + Strength Resistance - Hansika's Controversial Images

வலுக்கும் எதிர்ப்புகள் - ஹன்சிகாவின் சர்ச்சை படங்கள்

வலுக்கும் எதிர்ப்புகள் - ஹன்சிகாவின் சர்ச்சை படங்கள்
நடிகை ஹன்சிகாவின் சர்ச்சை படங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ஹன்சிகா ‘மஹா’ படத்தில் நடிக்கும் சர்ச்சை தோற்றங்கள் வெளியாகி எதிர்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைப்பது போன்ற புகைப்படம் வந்தது.

இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் ஜமீல் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகைப்படம் உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்து மக்கள் முன்னணி சார்பிலும் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்யப்பட்டது.

“சினிமா துறையில் இந்து மத கடவுள் மற்றும் இந்து துறவிகளை விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. ஹன்சிகா துறவி உடை அணிந்து புகைப்பிடிப்பது பெண் துறவிகளை அவமதிப்பதுபோல் உள்ளது. இயக்குனர் ஜமீல் மீதும், படத்தில் நடித்த ஹன்சிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கட்சி வலியுறுத்தியது.

இப்போது ரத்த வெள்ளத்தில் குளிப்பதுபோல் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் வைரலாகி வருகிறது.

மஹா படம் திரைக்கு வரும்போது எதிர்ப்புகள் கிளம்பலாம் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. மஹா என்ன மாதிரியான கதை என்பதை அறிய பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.