சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர் + "||" + In Shooting the actress told the actor for sexual harassment

படப்பிடிப்பில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர்

படப்பிடிப்பில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர்
படப்பிடிப்பில் நடிகையிடம் சில்மிஷம் செய்ததாக நடிகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தி பட உலகில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் ‘மீ டூ’வில் வெளியிட்டு வருகிறார்கள். பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் இதில் சிக்கி உள்ளனர். தற்போது இந்தி நடிகை டீனா தத்தாவும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் தாயன் என்ற இந்தி டி.வி தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மோஹித் மல்கோத்ரா நடிக்கிறார்.


நெருக்கமாக நடித்த காட்சியொன்றை படமாக்கியபோது மோஹித் மல்கோத்ரா கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக டீனா தத்தா புகார் கூறினார். திட்டமிட்டே அவர் சில்மிஷம் செய்தார். தயாரிப்பாளரிடம் புகார் செய்து இருக்கிறேன் என்றும் கூறினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு நடிகர் மோகித் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, டீனா தத்தா முதலில் தனக்கு தொல்லை எதுவும் நடக்கவில்லை என்றார். இப்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மாற்றி பேசுகிறார். படப்பிடிப்பில் என்னால் அவருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டு இருந்தால் அப்போதே சொல்லி இருக்கலாமே” என்று கூறினார்.

மோகித் மீது டீனா தத்தா பாலியல் புகார் கூறியதை தொடர்ந்து இருவரையும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. பாலியல் புகார் காரணமாக தாயன் தொடரை நிறுத்தி விட ஏக்தா கபூர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.