புதிய படத்தில் கைதியாக கார்த்தி


புதிய படத்தில் கைதியாக கார்த்தி
x
தினத்தந்தி 9 March 2019 4:58 AM IST (Updated: 9 March 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

புதிய படத்தில் கைதியாக கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.


கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்திக்கு 18-வது படம் ஆகும். கதாநாயகி இல்லாத படமாக தயாராகிறது.

நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு கைதி என்ற தலைப்பை சூட்டி இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். கார்த்தியின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.

இந்த படத்தில் கார்த்தி கைதி வேடத்தில் வருகிறார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அதிரடி திகில் படமாக உருவாகிறது. எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.


Next Story