சினிமா செய்திகள்

பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு + "||" + Actress Rohini criticized the Prime Minister

பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு

பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு
பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நடிகை ரோகிணி மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். “நரேந்திரமோடியிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள். இப்படி ஒரு ஆட்சி நாட்டுக்கு தேவை இல்லை. 5 ஆண்டுகளாக இந்துத்துவாவை அதிகமாக பார்த்து விட்டோம். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியினர் ரோகிணியை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அவரது செல்போன் நம்பரையும் வெளியிட்டுள்ளனர். ரோகிணிக்கு ஆதரவாகவும் வலைத்தளத்தில் சிலர் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ரோகிணி, “மோடிக்கு எதிராக எனது பேச்சை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் எனது எண்ணை பகிர்ந்து தகாத விதமாக பேசுபவர்களின் பண்பு என்னவென்பது தெரிய வருகிறது. வசவு சொற்கள் எல்லாமே பெண்ணையே மையப்படுத்தி இருப்பதையும் கவனிக்க வைக்கிறார்கள்” என்று கண்டித்துள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...