சினிமா செய்திகள்

தமிழ் படத்தில் அமிதாப்பச்சன் + "||" + In the Tamil film Amitabh Bachchan

தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்

தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்
“கதைதான் அமிதாப்பச்சன் வரை படத்தை கொண்டு சென்றது. 2 வருடத்துக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல் தடவையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சிவாஜிகணேசன் பட தலைப்பான ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரை சூட்டி உள்ளனர். இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். கள்வனின் காதலி படத்தை எடுத்து பிரபலமான தமிழ்வாணன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.


இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறும்போது “கதைதான் அமிதாப்பச்சன் வரை படத்தை கொண்டு சென்றது. 2 வருடத்துக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. திரைக்கதையை மட்டும் இயக்குனர் ஒரு வருடம் எழுதி இருக்கிறார். திரைக்கதையை அமிதாப்பச்சனிடம் கொடுத்தபோது முழுவதையும் படித்துவிட்டு கதை பிடித்துள்ளது கண்டிப்பாக நடிக்கிறேன்” என்று சம்மதித்தார் என்றார்.

இயக்குனர் தமிழ்வாணன் கூறும்போது எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் என்று 2 ஹீரோக்கள் நடிக்கும் கதை. இந்திய திரையுலகின் முடிசூடா மன்னராக திகழும் அமிதாப்பசனுடன் பணிபுரிவது பாக்கியம் என்றார். இந்த படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அமிதாப்பச்சன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். படத்தில் அமிதாப்பச்சன் தோற்றம் வெளியாகி உள்ளது. வேட்டி-சட்டையில் வயதான தோற்றத்தில் கச்சிதமாக இருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள்.