சினிமா செய்திகள்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 38-வது படம் + "||" + Sudha konkara Directed Actor Surya 38th movie

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 38-வது படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 38-வது படம்
சூர்யா நடித்து கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியானது.
செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘என்.ஜி.கே’ படம் கடந்த வருடமே திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்தார். இந்த நிலையில் என்.ஜி.கே படவேலைகள் முடிந்து விட்டதாக செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்தார்.


இந்த படத்தின் டப்பிங் ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. காப்பான் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சூர்யா அடுத்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கி பிரபலமான சுதா கொங்கரா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க உள்ளார்.

இது சூர்யாவுக்கு 38-வது படம் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெயின் மெண்ட் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, டைரக்டர்கள் ஹரி, சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.