இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025


தினத்தந்தி 13 Dec 2025 9:01 AM IST (Updated: 14 Dec 2025 9:50 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 Dec 2025 7:40 PM IST

    படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது

    படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவை, பீகாரின் பாட்னா - டெல்லி -இடையே தொடங்கப்பட உள்ளதாகத் தகவல். சுமார் 1,000 கி.மீ. பயண தூரத்தை 8 மணிநேரத்தில் |அடையும் வகையில் இச்சேவை இயக்கப்படவுள்ளது. இதன் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

  • முட்டை விலை வரலாறு காணாத உச்சம்
    13 Dec 2025 5:50 PM IST

    முட்டை விலை வரலாறு காணாத உச்சம்

    நாமக்கல் முட்டை விலை ரூ.6.15 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து 6.20 காசுகளாக உயர்ந்துள்ளது.. முட்டை தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்வதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்கள் என்பதால், கேக் தயாரிப்புக்காக அதிக அளவில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை ஜனவரியில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 13 Dec 2025 5:02 PM IST

    சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் வாரியம் முடிவு

    ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக பெங்களூரு சின்னசாமி | மைதானத்தில் விஜய் ஹசாரே போட்டிகளுக்கு சுமார் 3,000 ரசிகர்கள் வரை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரை உள்ளடக்கிய விஜய் ஹசாரே டெல்லி அணியின் போட்டிகளை |சின்னசாமி மைதானத்தில் நடத்தத் திட்டம் எனத் தகவல்

  • திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பாஜக: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
    13 Dec 2025 4:45 PM IST

    திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பாஜக: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. இதற்காக கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர்  மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; "கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்.

    கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

  • 13 Dec 2025 3:57 PM IST

    மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு... டிஜிபி ராஜீவ் குமார் சொன்ன தகவல்

    கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மெஸ்ஸியை சரியாக காண முடியாததால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், விழா ஏற்பாட்டாளரை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதாகவும் கூறினார்.

  • சம்பாதிக்கும் பெண்களுக்கு No ஜீவனாம்சம்
    13 Dec 2025 3:37 PM IST

    சம்பாதிக்கும் பெண்களுக்கு No ஜீவனாம்சம்''

    சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் பெண் ஒருவர் தான் படிக்கவில்லை, வேலையும் இல்லை கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டும் என கோரியிருந்த நிலையில், அவர் முதுகலை படித்தவர் என்பதும் வெப் டிசைனராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஜீவனாம்சம் தேவையில்லை என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 

  • 13 Dec 2025 1:55 PM IST

    உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதல் 


    உக்ரைன் ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 388வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

  • 13 Dec 2025 1:53 PM IST

    ஆறு படையப்பன் ரஜினி, ஏழு படையப்பன் தோனி; வைரலான பதிவு 


    எம்.எஸ். தோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு. புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டு உள்ளது.

  • 13 Dec 2025 1:51 PM IST

    தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு 


    தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story