சினிமா செய்திகள்

திலீப்புடன் இணைந்தார் அர்ஜூன் + "||" + Actor Arjun is exceptional

திலீப்புடன் இணைந்தார் அர்ஜூன்

திலீப்புடன் இணைந்தார் அர்ஜூன்
நடிகர் அர்ஜூன் அதற்கு விதிவிலக்கானவர்
சினிமாவில் மார்க்கெட் சரிந்தாலும் சரி.. வயதானாலும் சரி.. கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒரு சிலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நடிகர் அர்ஜூன் அதற்கு விதிவிலக்கானவர்.

அவர் பல நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கிவிட்டார். தமிழில் ‘இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்தார். தெலுங்கில் ‘நா பேரு சூர்யா’ படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பா கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மலையாளத்தில் திலீப் நடிக்கும் ‘ஜேக் டேனியல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அர்ஜூன். அவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார். குடும்பக் கதையாகவும், அதே நேரம் அதிரடி சண்டை காட்சிகளும் கொண்டதாக இந்தப் படம் உருவாகி வருகிறது.