சினிமா ‘ஜெனரேட்டர்’ வாகனத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதா? நடிகை கஸ்தூரி எதிர்ப்பு


சினிமா ‘ஜெனரேட்டர்’ வாகனத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதா? நடிகை கஸ்தூரி எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 May 2019 3:09 AM IST (Updated: 16 May 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகை கஸ்தூரி சமூக அரசியல் விஷயங்கள் குறித்து அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர்., லதா பற்றி பேசி எதிர்ப்புக்கு உள்ளானார். தற்போது சினிமா பிரச்சினையை சபரிமலையோடு ஒப்பிட்டு பேசி வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார்.

டுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனரேட்டர் வாகனத்துக்குள் ஆண்கள் புழங்கலாம். உறங்கலாம். ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விடக்கூடாது... காரணம் தீட்டாம்.” தென்னிந்திய பட உலகில் பெண்கள் மீது வெறுப்பு காட்டுவதை நான் அடிக்கடி பேசிவருகிறேன். சினிமா வேனுக்குள் பெண்கள் நுழையக்கூடாதா? சினிமா ஒலி, ஒளி குழுவில் பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவுடன் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்று எழுதப்பட்டுள்ள ஜெனரேட்டர் வாகன புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கஸ்தூரி கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். “அந்த வண்டிக்குள் ஏன் பெண்கள் போகவேண்டும்? அது வெறும் ஜெனரேட்டர் வண்டிதானே. உங்கள் சினிமா பிரச்சினையை இந்துக்களுக்கு எதிரான பிரச்சினையோடு ஏன் சேர்க்கிறீர்கள்? இந்த அறிவிப்பு பெண்களின் பாதுகாப்புக்குத்தான் என்றெல்லாம் பேசி அவரை கண்டித்து வருகிறார்கள்.

இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பான விவாதமாக மாறி இருக்கிறது.

Next Story