சினிமா செய்திகள்

இதுவரை இல்லாத வியாபாரம்! + "||" + No business yet!

இதுவரை இல்லாத வியாபாரம்!

இதுவரை இல்லாத வியாபாரம்!
விஜய்யை வைத்து அட்லீ டைரக்டு செய்த ‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தன.
அதைத்தொடர்ந்து இருவரும் 3-வது முறையாக, ‘பிகில்’ படத்தில் இணைந்து பணிபுரிந்து இருப்பதால், இந்த படம் வினியோகஸ்தர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு படம் வியாபாரம் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களின் வியாபார சாதனைகளை, ‘பிகில்’ முறியடித்து இருக்கிறது.

இந்த படம், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது. படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பிகில்’ படத்தை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள்!