விபத்து எதிரொலி: கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில் மாற்றம்


விபத்து எதிரொலி: கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில் மாற்றம்
x
தினத்தந்தி 22 May 2020 12:16 PM IST (Updated: 22 May 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

விபத்து சம்பவம் எதிரொலியாக, கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பை ஆரம்பித்ததில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டன. கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை சில வாரங்கள் நிறுத்தினர். பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. மீண்டும் பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியபோது கிரேன் விழுந்து படக்குழுவினர் 3 பேர் பலியான கோர விபத்து நடந்தது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கினால் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்தியன்-2 படத்தை கைவிட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பட நிறுவனம், மறுத்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் சில மாற்றங்களை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கு பதிலாக பல்லாவரத்தில் உள்ள பின்னிமில் வளாகத்தில் புதிதாக அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story