கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை படமாகிறது நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா மூன்று பேரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்?


கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை படமாகிறது நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா மூன்று பேரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்?
x
தினத்தந்தி 2 Jun 2020 6:48 AM IST (Updated: 2 Jun 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

சமீபகாலமாக இந்திய திரையுலகில் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சென்னை,

வாழ்க்கை வரலாற்று படங்கள் வெற்றிகரமாக ஓடி, சாதனை படங்களாக அமைகின்றன. எனவே அந்த படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு சமீபகால உதாரணமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்‘ படத்தை கூறலாம். இந்த வரிசையில் அடுத்து, வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகிறது. சஞ்சனா ரெட்டி டைரக்டு செய்கிறார். சத்யநாராயணா, கொனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகிய மூன்று பேர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மூன்று பேரில் ஒருவர் கர்ணம் மல்லேஸ்வரியாக நடிப்பார்கள் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

Next Story