முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்பு: வெப் தொடரில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்


முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்பு: வெப் தொடரில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2020 12:39 AM GMT (Updated: 9 Jun 2020 12:39 AM GMT)

முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வெப் தொடரில் இருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன.


பிரபல இந்தி பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான டிரிபிஸ் எக்ஸ்2 வெப் தொடரில் ராணுவத்தினருக்கு எதிரான அவதூறு காட்சிகள் இருப்பதாக கண்டனங்கள் கிளம்பின. மறைந்த ராணுவ வீரரின் மனைவி கள்ளக்காதலனுக்கு ராணுவ சீருடையை அணிவித்து தகாத உறவு வைத்துக்கொள்வது போன்ற காட்சியை வைத்து இருப்பதாகவும், இது ராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்றும் எதிர்ப்பு கிளம்பியது. ஏக்தா கபூர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கமும் “நாட்டுக்காக தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்ப பெண்களையும் வெப் தொடரில் தவறாக சித்தரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. சர்ச்சை காட்சிகளை ஏக்தா கபூர் நீக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரித்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக ஏக்தா கபூர் அறிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “ராணுவ வீரர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். நமது பாதுகாப்புக்காக பெரிய தியாகங்களை செய்கின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டோம்” என்று கூறியுள்ளார்.

Next Story