ஆந்திரா, தெலுங்கானாவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி
ஆந்திரா, தெலுங்கானாவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சில மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து குறைவான ஊழியர்களை கொண்டு இயங்க தொழில் துறைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. தமிழ் நாட்டில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்து உள்ளது. தெலுங்கானாவில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அங்குள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுபோல் ஆந்திர அரசும் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி தலைமையில் நாஜார்ஜுனா, இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் கல்யாண் உள்ளிட்ட பலர் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறும்போது, “தெலுங்கானாவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அங்குள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திராவிலும் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியிடம் வற்புறுத்தினோம். அவரும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வருகிற 15-ந்தேதிக்கு பிறகு சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருக்கிறார்” என்றார்.
Related Tags :
Next Story