எந்த டைரக்டரிடமும் அஜித் கதை கேட்கவில்லை!
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் அவர் எந்த டைரக்டரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
அஜித்குமார் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் நடித்த ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவாதான் அடுத்த படத்தின் டைரக்டர் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. அவர், அஜித்திடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக பேசப்பட்டது.
விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், அஜித்தை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக இன்னொரு தகவல் பரவியது. இரண்டு தகவல்களுமே வதந்தி என்பது விசாரித்ததில் தெரியவந்தது. “அஜித் எப்போதுமே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு கதை கேட்பார். சமீபத்தில் அவர் எந்த டைரக்டரிடமும் கதை கேட்கவில்லை” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story