இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jun 2025 7:14 PM IST
- ராஜஸ்தானில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு
- பாரான் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன
- பன்வர்காட் காவல் நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர், இடுப்பளவு தண்ணீரில் கைதிகளை இடம் மாற்ற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
- காவல் நிலைய கோப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
- 23 Jun 2025 6:54 PM IST
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது
சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த காவலாளி பழனி போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளியை கைது செய்து போலீசார் விசாரணை
- 23 Jun 2025 5:34 PM IST
தரம், தரம் என்றார்கள்!
#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!- முதல்வர் முக ஸ்டாலின் பதிவு
- 23 Jun 2025 5:07 PM IST
வடிவேலு தொடர்ந்த வழக்கு - சிங்கமுத்துவிற்கு ரூ.2,500 அபராதம்
நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவிற்கு ரூ.2,500 அபராதம்
தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் வடிவேலு வழக்கு
பதிலுரை தாக்கல் செய்யாததால் நடிகர் சிங்கமுத்துவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
- 23 Jun 2025 3:20 PM IST
தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டை தெரிவித்துள்ளது.
- 23 Jun 2025 2:42 PM IST
கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை
என்.எஸ்.கிருஷ்ணன் சிலை சென்னை வாலாஜா சாலை கலைவாணர் அரங்கத்தில் நிறுவப்படும். சென்னை ஜி.என்.செட்டி தெருவில் இருந்த என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்கத்தில் நிறுவப்படும்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 23 Jun 2025 2:28 PM IST
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம்
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
- 23 Jun 2025 2:19 PM IST
நாளை மறுநாள் கூடுகிறது பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுவதாக பாமக அரசியல் குழு தலைவர் தீரன் அறிவித்துள்ளார்.









