வைரஸ் தாக்கிய நடிகையுடன் நடித்த டி.வி. நடிகருக்கும் கொரோனா
வைரஸ் தாக்கிய நடிகையுடன் நடித்த பிரபல டி.வி நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
பிரபல டி.வி நடிகை நவ்யா சாமிக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர் தமிழில் வாணிராணி, அரண்மனை கிளி, ரன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அமே கதா, நா பேரு மீனாட்சி ஆகிய தொடர்களில் நடிக்கிறார். ஆந்திராவில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் ஐதராபாத்தில் நடந்த நா பேரு மீனாட்சி படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்த நவ்யா சாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நவ்யா சாமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ந பேரு மீனாட்சி தொடரில் நவ்யா சாமியுடன் நடித்த பிரபல டி.வி நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவிகிருஷ்ணா தனது சமூக வலைதள பக்கத்தில், “3 நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story