சினிமா செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் + "||" + Actress Gayatri Raghuram has lodged a complaint with the police

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-


எங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏழை-எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காக போராடி வரும் அவரைப்பற்றி சாதியின் பெயரை அடையாளப்படுத்தியும், மதத்தை அடையாளபடுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.