தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட எதிர்ப்பு


தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 12:38 AM GMT (Updated: 28 Jun 2021 12:38 AM GMT)

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் விரைவில் நடைபெற உள்ள தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ்ராஜுக்கு தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா கணேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’பிரகாஷ்ராஜ் நடிகர் மட்டுமன்றி மனிதாபிமானம் கொண்டவர். தெலுங்கு மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் கன்னடராக இருந்தாலும் ஐதராபாத் அருகில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்து வளர்ச்சி பணிகள் செய்து வருகிறார். அவரை கன்னடர் என்று பிரித்து பேசுவது சரியல்ல. மொழிகள் ரீதியாக கலைஞர்களை வேறுபடுத்த கூடாது’’ என்றார்.

Next Story