சினிமா செய்திகள்

‘தேன்' படத்துக்கு அரசு விருது + "||" + Government Award in Thaen film

‘தேன்' படத்துக்கு அரசு விருது

‘தேன்' படத்துக்கு அரசு விருது
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி நடித்து திரைக்கு வந்த தேன் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
மலை கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தேன் படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் விருதுக்கு தேர்வாகி உள்ளது. புதுச்சேரியில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் விருதுக்கு தேர்வாகி உள்ள தேன் படக்குழுவினருக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது.