ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு


ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2021 7:26 PM IST (Updated: 13 Sept 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இப்படத்திற்கு ‘செல்ஃபி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.
1 More update

Next Story