முகத்தில் திராவகம் வீச முயற்சி முன்னாள் காதலர் மீது நடிகை புகார்


முகத்தில் திராவகம் வீச முயற்சி முன்னாள் காதலர் மீது நடிகை புகார்
x
தினத்தந்தி 14 Sept 2021 6:11 PM IST (Updated: 14 Sept 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அக்‌ஷரா சிங் தனது முன்னாள் காதலர் ஆள் வைத்து திராவகம் வீச முயன்றதாகவும் அதில் இருந்து தப்பியதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ஒருவனை காதலித்தேன். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவனை பிரிய முடிவு செய்தேன். இதனால் அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்தான். என்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் சதி செய்தான்.

ஒரு கட்டத்தில் எனது முகத்தில் திராவகம் வீசி கொலை செய்வதற்காக சிலரை அனுப்பி வைத்தான். அவர்களிடம் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது'' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story