சினிமா செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் ‘பீஸ்ட்' + "||" + Vijay's 'Beast' in the final stages of filming

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் ‘பீஸ்ட்'

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் ‘பீஸ்ட்'
விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தனர். பின்னர் சென்னை திரும்பி தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டெல்லியிலும் ஒரு வாரம் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இன்னும் சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு டப்பிங், இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர்.


பொங்கலுக்கு பீஸ்ட் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66-வது படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கியது.
2. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.
3. உறுதியான விஜய்யின் 66-வது படம்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம்.