பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி


பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி
x
தினத்தந்தி 18 Sep 2021 11:12 AM GMT (Updated: 2021-09-18T16:42:26+05:30)

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கினால் முடங்கிய படப்பிடிப்பை தளர்வுக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

சென்னையிலும், வட மாநிலங்களிலும் பெரும்பகுதி படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ளனர். தற்போது பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வனில் தனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டதாக ஜெயம்ரவி வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியும் தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக தற்போது அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், “இளவரசி திரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசர் ஜெயம் ரவியே என் பணியும் முடிந்தது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், அவரது சகோதரி குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடிக்கிறார்கள். கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் அடுத்த சில வாரங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story