அடுத்த வருடம் வெளிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது


அடுத்த வருடம் வெளிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது
x
தினத்தந்தி 24 Sep 2021 4:29 PM GMT (Updated: 2021-09-24T21:59:45+05:30)

மணிரத்னம் டைரக்டு செய்து வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதன் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியபிர தேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடந்தது.

இத்துடன் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

பல தலைமுறைகள் கொண்டாடி வரும் நாவல் இது. இந்த நாவலை படித்து பரவசம் அடைந்தவர்கள், பலர். இதை சிலர் படமாக்க முயன்றார்கள். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மணிரத்னம் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் பிரபு, சரத்குமார், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம், நாசர், நிழல்கள் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யாலட்சுமி, ஜெயசித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் கோடை விருந்தாக திரைக்கு வரும்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்குகிறார் என்றதும், அந்த நாவலை முதலில் படித்துவிட வேண்டும் என்ற ஆவலில், உலகம் முழுக்க பலர் வாங்கி படித்து வருகிறார்கள் என்று படக்குழுவினர் கூறினார்கள்.

Next Story