நாகர்ஜூனா ஜோடியாக இலியானா


நாகர்ஜூனா ஜோடியாக இலியானா
x
தினத்தந்தி 26 Sep 2021 2:52 PM GMT (Updated: 26 Sep 2021 2:52 PM GMT)

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகர்ஜூனா ஜோடியாக இலியானா நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராகவும், முன்னணி நடிகராகவும் இருப்பவர், நாகர்ஜூனா. இவர் தெலுங்கில் ‘பங்கார்ராஜூ’, இந்தியில் ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் ‘கோஸ்ட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தலைப்பே இது ஒரு பேய் படம் என்பதை சொல்கிறது. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நாகர்ஜூனா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கதாநாயகியாக நடிக்க இலியானாவிடம் பேசி வருகிறார்கள்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். இடையில் புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் ஏற்பட்ட காதல் தோல்வியின் காரணமாக மன உளைச்சலில் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு விட்டதாகவும், தன்னுடைய உடல் எடையை குறைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறதாம். எது உண்மை என்பது, படக்குழுவினரின் அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

Next Story