மீண்டும் சர்ச்சையில் நடிகை சமந்தா


மீண்டும் சர்ச்சையில் நடிகை சமந்தா
x
தினத்தந்தி 26 Sep 2021 10:47 PM GMT (Updated: 2021-09-27T04:17:03+05:30)

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு சமந்தாவும், நாகசைதன்யாவும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இருவருக்கும் சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சட்டா படம் மூலம் நாகசைதன்யா இந்தியில் அறிமுகமாகிறார். இதையடுத்து அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் விருந்து அளித்தனர். நாகார்ஜுனா, நாகசைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என்று தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.

Next Story