நடிகை சமந்தா- நாக சைதன்யா பிரிய யார் காரணம்...? போட்டுடைத்த கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரனாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார்.
அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story