மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்


மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்
x
தினத்தந்தி 12 Oct 2021 8:03 PM GMT (Updated: 12 Oct 2021 8:03 PM GMT)

விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன்.

விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது சில வருட இடைவெளிக்கு பிறகு ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்கிறார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை வணிக ரீதியிலான படங்களில் நடித்த லட்சுமி மேனன் முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து பாதிப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் வருகிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ளார்.

Next Story