'மெட்டி ஒலி' புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்


மெட்டி ஒலி புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:36 AM GMT (Updated: 17 Oct 2021 7:36 AM GMT)

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

சென்னை,

'மெட்டி ஒலி' தொடர் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி   மரணமடைந்தார். 40 வயதாகும் உமா மகேஸ்வரி, திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்தார். திருமுருகன் மனைவியாக இதில் நடித்த அவர் கேரக்டர் மிகவும் பிரபலமானது. 

‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை .

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

சின்ன வயதிலேயே அவர் மரணமடைந்திருப்பது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story