பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 6:57 PM IST (Updated: 2 Dec 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த நிலையில், நடிகர் விக்ரமின் 61-வது படத்தை பா. ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த செய்தி உறுதியாகி உள்ளது.

'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story