மீண்டும் சொந்த குரலில் டப்பிங் செய்கிறார் நயன்தாரா
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார்.
சென்னை,
நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா இந்த படத்திற்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார். வழக்கமாக தமிழ்ப்படங்களில் நயன்தாராவிற்கு தீபா வெங்கட் டப்பிங் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டைரக்டர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக்குகளை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம்' என்று பதிவிட்டுள்ளார்.
#Kanmani anbodu Kaadhalan Naan ezhudhiya dialogues neeyae dub panradhu migundha sandhosham 😍😇🥳☺️🥰❤️ #KaathuVaakula started dubbing for #KaathuVaakulaRenduKaadhal@VijaySethuOffl#Nayanthara@Samanthaprabhu2@anirudhofficial@Rowdy_Pictures@7screenstudio@SonyMusicSouthpic.twitter.com/DUmsYFDpQe
— Vignesh Shivan (@VigneshShivN) December 2, 2021
Related Tags :
Next Story