நாயகனாக 29 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்..!
'29 ஆண்டுகளான விஜய்யிசம்' - சிறப்பு வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் விஜய் குறித்த பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான விஜய் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. 1992-ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய்.
நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி திரைத்துறையினர் பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறப்பு வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் விஜய் குறித்த பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். '29 ஆண்டுகளான விஜய்யிசம்' (29 Years of Vijayism) என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைதளங்களில் டிரெண்டு செய்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 'அயராது உழைப்பால் 29வது வருடத்தை இந்திய சினிமாவில் நிறைவு செய்யும் அன்பு தம்பி விஜய்யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வேண்டும்' என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
தன் அயராது உழைப்பால் 29வது வருடத்தை இந்திய சினிமாவில் நிறைவு செய்யும் அன்பு தம்பி @actorvijay யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வாழ்த்தி இந்த Special motion poster வெளியிடுகிறேன் #29YearsOfVijayismhttps://t.co/pyX1drGQEt
— Kalaippuli S Thanu (@theVcreations) December 3, 2021
Related Tags :
Next Story