விஜய்யை வாழ்த்திய குஷ்பு


விஜய்யை வாழ்த்திய குஷ்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 2:21 PM IST (Updated: 6 Dec 2021 2:21 PM IST)
t-max-icont-min-icon

நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் டே’ என்று குறிப்பிட்டு அவரை வாழ்த்தி உள்ளார்.

‘நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தற்போது 29 ஆண்டுகள் சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ளார். ஆரம்பத்தில் ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ப்ரியமுடன்’, துள்ளாத மனமும் துள்ளும்’, காதலுக்கு மரியாதை’, ‘குஷி’ என காதல் படங்களில் நடித்து பின்னர் கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, வேட்டைக்காரன், வேலாயுதம் என்று அதிரடி நாயகனாக உயர்ந்தார். ‘துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில்’ உள்ளிட்ட பல படங்கள் ரூ.100 கோடி வசூலைத் தாண்டின. 

அழகிய தமிழ் மகன் படத்தில் முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடித்தார். பல படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் நடிக்கிறார். விஜய்யின் 29 ஆண்டு சினிமா வாழ்க்கையை ரசிகர்கள் வலைத்தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். நடிகர்-நடிகைகள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் டே’ என்று குறிப்பிட்டு அவரை வாழ்த்தி உள்ளார். விஜய் படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Next Story