நடிகரை காதலித்து பிரிந்த ராஷ்மிகா
தனது காதல் தோல்வி அனுபவம் குறித்து ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தனது காதல் தோல்வி அனுபவம் குறித்து ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘காதலில் விழுந்தவர்கள் தோல்வி அடையலாம். ஆனால் காதல் மட்டும் தோற்காது. என் காதல் கூட தோல்வி அடைந்தது. ஆனால் காதல் மீது எனக்குள்ள கவுரவம் குறையவில்லை. என் முதல் கன்னட படமான கிரிக்ஸ் பார்ட்டியில் நடித்தபோது என்னுடன் நடித்த ரக்சித் ஷெட்டி மீது காதல் ஏற்பட்டது. முதலில் நட்பாகவே பழகினோம். அது எப்போது காதலாக மாறியது என்பது எனக்கே தெரியவில்லை. படப்பிடிப்பு அரங்கில் ஒவ்வொரு கணமும் பிக்னிக் மாதிரி கழிந்தது.
நாங்கள் காதலிப்பதற்காகவே இந்த படம் தயாரிக்கிறார்களோ என தோன்றியது. எங்கள் குடும்பத்தில் யாரும் எங்கள் காதலுக்கு தடை சொல்லவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன. இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எங்கள் காதல் கதை கடந்து போன ஒரு அத்தியாயம். எதிர்காலத்தில் மறுபடியும் நான் காதலிப்பேனா இல்லையா என்பதைப் பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை” என்றார்.
Related Tags :
Next Story