சமந்தா விவாகரத்து வருத்தம் அளிக்கிறது - நடிகர் நாகார்ஜுனா


சமந்தா விவாகரத்து வருத்தம் அளிக்கிறது - நடிகர் நாகார்ஜுனா
x
தினத்தந்தி 6 Dec 2021 3:04 PM IST (Updated: 6 Dec 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும்கூட நான் அவரை எனது மகள் மாதிரிதான் பாவிக்கிறேன் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணந்து அவரை விவாகரத்து செய்வதாக நடிகை சமந்தா அறிவித்த பிறகு தற்போது முதல் முறையாக விவாகரத்து குறித்து நாகார்ஜுனா பேசி உள்ளார். 

தொலைக்காட்சிக்கு நாகார்ஜுனா அளித்துள்ள பேட்டியில், ‘‘நடிகை சமந்தா மிக வேகமாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து விட்டார். எங்கள் எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல சமந்தா அனைவருடனும் மிகவும் ஜாலியாக இருப்பார். எனக்கும் என் மனைவி அமலாவுக்கும் சமந்தா ஒரு மருமகளாக இல்லாமல் ஒரு மகள் மாதிரி இருந்தார். 

நாகசைதன்யா -சமந்தா பிரியும் நிலை ஒன்று வரும் என நாங்கள் கனவில்கூட கற்பனை செய்யவில்லை. விவாகரத்து முடிவு எடுத்தது வேதனையாக இருக்கிறது. அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு வராமல் இருந்திருக்கலாம். இருவரும் விட்டுக்கொடுத்து போய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும்கூட நான் அவரை எனது மகள் மாதிரிதான் பாவிக்கிறேன். அதுமட்டுமல்ல அவரும் அவரது சினிமா கேரியரும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என மனதார எதிர்பார்க்கிறேன். மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Next Story