விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டீசர் வெளியானது..!


விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசர் வெளியானது..!
x
தினத்தந்தி 6 Dec 2021 7:58 PM IST (Updated: 6 Dec 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். 

மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் 'மாமனிதன்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story